பழம்பெறும் புகழ்பெற்ற ஆலயங்களுல் ஒன்று திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு பெதஂதரணேஷ்வரர் - பெரியநாயகி ஆலயமாகும் இந்த ஆலயத்தின் புகழும் கீர்த்தியும் இந்த ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு பெரியநாயகி திருவிளையாடலை சார்ந்ததாகும் வல்லாள மகாராஜாவின் மனைவி கருவில் உள்ள குழந்தை பிறந்து மண்ணில் பட்டுவிட்டால் அது உலகத்தையே அழிக்கும் வல்லமை வாயந்த குழந்தையாக இருக்கும் என்பது ஈஸ்வரன் தந்த வரமாகும், அது தேவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது ஆகவே தேவர்களும் ரிஷிகளும் ஒன்று சேர்ந்து பார்வதி தேவியிடம் முறையிட்டு பரிகாரம் வேண்டினர்.
தேவர்களின் கோரிக்கையை..
தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பார்வதி தேவி. வல்லாள மகராஜாவின் மனைவியின் பிரசவ காலத்தில் மருத்துவச்சி யாரும் கிடைக்காமல் செய்துவிட்டு தானே மருத்துவச்சியாக ராணியின் பிரசவ அறைக்குள் செல்கிறாள் தேவி. அங்கே ராணி பிரசவ வேதனையில் அலற உடனே மருத்துவச்சியாக உள்ளே இருந்த பார்வதிதேவி பெரியநாயகியாக அவதாரமெடுத்து ராணியை தூக்கி மடியில் கிடத்திகொண்டு வயிற்றை பிளந்து குழந்தையை எடுத்து அழிக்கிறாள் தேவி. அந்த கோரமான செயலை தடுக்க வாளுடன் உள்ளே பாய்ந்த மன்னனையும் காலால் மிதித்து வதம் செய்கிறாள்.
தேவியின் ஆச்ரோஷ நிலையை...
அப்போது ஏற்பட்ட தேவியின் ஆச்ரோஷ நிலையை கண்டு உலகம் நடுங்குகிறது. தேவியின் ஆக்ரோஷத்தை குறைக்க அனைத்து தேவர்களும், ரிஷிகளும் அங்கு கூடி தேவியை சாந்தப்படுத்துகிறார்கள். அப்போதும் தேவியின் சினம் தனியாததால் சிவபெருமானை அனைத்து தேவர்களும் ரிஷிகளும் வணங்கி முறையிட அதனை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் தேவியின் ஆக்ரோஷ நிலைக்கு ஏற்றவாறு எட்டு கரங்களுடனும். ஆகோரமான புலிவாகனத்தில் உத்தண்டராயராக அவதாரமெடுத்து தேவியின் சினத்தை தனிக்கிறார்.
வதம் செய்யப்பட்ட...
அதன்பின் வதம் செய்யப்பட்ட வல்லாள மகாராஜனையும் மகாராணியையும் உயிருடன் மீட்டு நீங்கள் இருவரும் நீண்டநாள் நல்லாட்சி புரிந்த பின் சொர்க்கம் சேருங்கள் என்று வரம் தந்து அவர்களை ரட்சித்தார். அப்படி தேவர்களும், ரிஷிகளும் மறுபடியும் ஒன்று சேர்ந்து தேவியை பூசித்து தேவியின் அருள்பெற்ற இடம்தான் தேவர்கண்டநல்லூர் என்பது தொன்றுதொட்டு மருளாளிகளின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அம்பாளின் திருவிளையாடல் இன்றும் பக்தர்களின் உள்ளத்தை கவர்ந்துள்ளது. அம்பாளையும் இங்கு கோயில்கொண்டுள்ள மற்ற தெய்வங்களையும், தங்களின் குலதெய்வமாக கொண்டுள்ள மருளாளிகள் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அருள்மிகு பெரியநாயகி இங்கிருந்தபடியே தன் அருளை வழங்குவது மெய்சிலிர்க்கும் செயலாகும். இன்றும் குறிப்பிட்ட நாட்களில் நள்ளிரவில் பக்தர்களின் காதில் ஒலிக்கும் தண்டை ஒலி அம்பாளின் ஊர்காவல் செயலாக பேசப்படுகிறது. மறுநாளேடி மறு மாதமோ மறு வருடமோ பக்தர்களுக்கு நிகழவிருக்கும் சம்பவங்களை அவர்களின் கனவில் உணர்த்தும் மெய்சிலிர்க்கும் நிகழ்ச்சி இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது.
மகாவிஷ்னுவின் அவதாரமாக பெதஂதரணேஷ்வரர்
தல சிறப்புகள்
இனபாகுபாடின்றி குலதெய்வ....
அனைத்து மக்களும் இனபாகுபாடின்றி குலதெய்வ ஆலயமாக ஏற்று வணங்கும் ஆலயம் இது. இந்த ஆலயத்தில் மகாவிஷ்னுவின் அவதாரமாக பெதஂதரணேஷ்வரர்.
சிவனின் அவதாரமாக...
சிவனின் அவதாரமாக உத்தண்டராயரும் கோயில்கொண்டு அருள்பாலிப்பதால் இந்த ஆலயத்தில் வணங்குவது சிவாலயம் மற்றும் வைஷ்னவ ஆலயத்தில் வணங்கும் பாக்யம் கிட்டும். இந்த ஆலயத்தில் எல்லா தெய்வங்களும் உள்ளதால் இங்கு பலியிட்டு வணங்கும் மருளாளிகளும் உண்டு பால் பொங்கல் செய்து படையலிட்டு வணங்கும் மருளாளிகளும் உண்டு ஒரே நேரத்தில் இருதரப்பினரும் நேர்த்திசெலுத்தி படையலிடும் சந்தர்ப்பத்திலும் எந்தவித குறைபாடும் இல்லாமல் அவரவர் நேர்த்தியை அவரவர் திருப்தியாக செய்து வணங்குவார்கள்.
ஆண்டு தோறும் நடந்து வரும் நான்கு...
ஆண்டு தோறும் நடந்து வரும் நான்கு கப்பரை பூஜைகளில் சித்திரை பூஜை மிகவும் சிறப்பாக மருளாலிகள் அனைவரும் தங்கள் நேர்த்திகளை செலுத்தி வழிபடுவது மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சித்திரை கடைசி செவ்வாய் இரவு 9 மணியளவில் சித்திரைபூஜைக்காக கோயிலில் குழுமியுள்ள பக்தர்களின் இரவு பொழுது போக்கு நிகழ்ச்சியாக தலைசிறந்த நாடக கலைஞர்களைக்கொண்டு அரிச்சந்திரா மயான காண்டம் போன்ற பக்தி நாடகங்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. மறுநாள் புதன்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் ஆட்கொண்டார் மண்டபத்துள் பூஜைகள் செய்து தேவ அருள்பெறுகக்கூடிய பம்பை ஒலி எழுப்பி கப்பரை எடுக்கும் அருளாளருக்கு அருள்வரப்பெற்று கப்பரை எடுப்பது காண்போரின் உடலையும், உள்ளத்தையும் சிலிர்க்கச்செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும்.
ஆட்கொண்டார் மண்டப்பத்துள்...
ஆட்கொண்டார் மண்டப்பத்துள் எடுக்கப்படும் கப்பரை கோவிலுக்குள் ஒவ்வொரு சன்னிதியாக ஆடி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நண்பகல் வரை சிறப்பாக நடக்கும் கடைசியாக அங்கு உத்தண்டராயர் சன்னிதிவாசலில் அமைக்கப்பட்டடுள்ள பூதகணங்கள் கையில் கப்பரை இறக்கி வைக்கப்படும். இந்த ஆலயத்தின் முன்பகுதியில் கோவில் கொண்டுள்ள குமாரசுவாமிக்கு மாத கிருத்திகையில் சிறப்பு பூஜையுடன் கோவிலின் நாண்கு வீதியும் சுற்றிவரும் சுவாமி புறப்பாடும் வைகாசி விசாகத்தில் காவடி திருவிழாவும், தைப்பூசத்தில் தீர்த்தம் கொடுக்கும் விழாவும், சிறப்பாக நடைபெறுகிறது.
காவடி திருவிழாவில்...
காவடி திருவிழாவில் பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, அலகு காவடி, என பலவிதமான காவடிகள் எடுத்து குமாரசுவாமி சன்னிதியில் செலுத்தி வழிபடுவது சிறப்பாக இருக்கும். தைப்பூசத்தில் குமாரசுவாமி எழுந்தருளும் சுவாமி புறப்பாடு நடத்தி சிங்களாஞ்சேரி எனும் இடத்தில் நதியில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பாக நடைபெறும். குமாரசுவாமி சன்னிதிக்கு பக்கத்தில் கோவில் கொண்டுள்ள ஆஞ்சேேநயருக்கு அமாவாசை தினத்தில் சிறப்பான பூஜையுடன் அன்னதானம் நடைபெறும். அனுமந்த் ஜெயந்தி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஒவ்வொரு தினமும்...
ஒவ்வொரு தினமும் இந்த கோயிலில் பக்தர்களின் காதுகுத்து, முடிகாணிக்கை, திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பது சிறப்பாக இருக்கும். தற்போது இந்த கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்து வரும் திரு. கே. ஆர். ராமலிங்கம் பிள்ளை அவர்கள் மிகவும் சிறப்பாக ஆலயத்தை நிர்வகித்து வருகிறார். அவரது முயற்சியால் மருளாளிகளின் உதவியோடு ஆலயத்தில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மருளாளிகளின் பரிபூரண ஒத்துழைப்போடு ஆலயத்தில் திருப்பணிகள் செய்து 15-9-2011 -ல் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கல்யாண மண்டபம், அன்னதான மண்டபம், நிழற்கூடங்கள் முதலிய வசதிகளை சிறப்பாக செய்துள்ளார்.
இன்னும் பல தேவையான திருத்தப்பணிகள்..
இன்னும் பல தேவையான திருத்தப்பணிகள் அவ்வப்போது நடந்து கொண்டு வருகிறது. தேவர்கண்டநல்லூர் அருள்மிகுபெதஂதரணேஷ்வரர் பெரியநாயகி ஆலயத்தில் அம்பாளையும், மற்ற தெய்வங்களையும் வணங்கி அருள்பெற வரும் நாம் முதலில் ஆலய வாயிலில் இருபது அடி உயரத்தில் காட்சி தரும் காவல் தெய்வமும் ஆஞ்சநேயரின் அவதாரமும் ஆன அருள்மிகு வழியூரானை வணங்கி அருள் பெற்று கோவிலின் உள்ளே செல்கிறோம் அங்கே அம்பாளுக்கு துணையாக ஈஸ்வரானால் ஆனையிடப்பட்டு கோவில் கொண்டுள்ள அருள்மிகு குமாரசுவாமியையும், கணபதியையும். வணங்கி பக்கத்தில் கோயில் கொண்டுள்ள ஆஞ்சநேயரை வணங்குகிறோம் அடுத்து அருள்மிகு பரமநாயகியை வணங்கி ஆலயத்தினுள் நுழைகிறோம். அங்கே தூண்டில்காரன் சன்னிதியில் தூண்டில்காரன். காமாட்சியம்மன், பத்ரகாளியம்மன், ரெங்கராஜபெருமாள் ஆகியோரை வணங்குகிறோம்.
அவதார கோலத்திலும் புன்னகை முகத்தோடும் காட்சி தரும்..
அடுத்து அங்கே அவதார கோலத்திலும் புன்னகை முகத்தோடும் காட்சி தரும் அருள்மிகு பெரியநாயகியை ஒருமுறை வணங்கி நேராக வாகையடி மூர்த்தி சன்னிதி சென்று மணியசைத்து சிவபெருமான் மகாவிஷ்னுவின் அவதாரமான வாகையடி மூர்த்தி மற்றும் வீரனை வணங்கி அருள்பெறுகிறோம். அங்கிருந்து நேராக மற்றும் அம்பாளின் ஆக்ரோஷத்தை குறைக்க ஈஸ்வரானால் எடுக்கப்பட்ட அவதாரமான உத்தண்டராயர் சன்னிதியில் நுழைந்து அங்குள்ள அனைத்து தேவர்களையும் வணங்கி எதிரிலுள்ள சாஸ்தா மண்டபத்துள் நுழைந்து அங்குள்ள பரிவாரகர்களான அனைத்து தெய்வங்களையும் வணங்குகிறோம். அடுத்து நேராக நைனார் சன்னிதியை அடைந்து கை தட்டி வணங்கி அங்குள்ள அனைத்து தேவர்களிடமும் அருள்பெறுகிறோம்
பிறகு மகாவிஷ்னுவின் அவதாரமாக கோவில்..
பிறகு மகாவிஷ்னுவின் அவதாரமாக கோவில் கொண்டுள்ள பெத்தாரண்யேசுவரர் சன்னிதியில் நுழைந்து அங்குள்ள பரிவாரகர்களோடு அவரை வணங்கி அருள்பெறுகிறோம். பின் வடக்கு வாசல் பக்கத்தில் உள்ள வீரன் சன்னிதியில் பொம்மி வெள்ளையம்மாள் சமேத வீரன் சுவாமியை வணங்குகிறோம். பின் வடக்கு வாசல்வழியே வெளியே வந்து பலிபீடம். முடிகாணிக்கை செலுத்துமிடம் ஆகியவற்றை கண்டு தியானிக்கிறோம்.
அருள்மிகு பெரியநாயகி அம்பாளை மறுபடியும் மனமுறுகி வணங்கி ..
பின் நேராக அருள்மிகு பெரியநாயகி அம்பாளை மறுபடியும் மனமுறுகி வணங்கி அருள்பெறுகிறோம். பின் அம்பாளின் எதிரில் அமர்ந்து சிறிது நேரம் கண்மூடி தியானிக்கிறோம். பிறகு அம்பாளிடம் விடைபெற்று வெளியில் வந்து மீண்டும் வழியூரானை வணங்கி கோயிலுக்குள் நாம் வணங்கிய அனைத்து தெய்வங்களையும் மனதில் தியானித்து சாஸ்டாங்கமாக தரையில் வீழ்ந்து வணங்கி மிகுந்த மன அமைதியுடன் வீடு கண்மூடி திரும்புகிறோம். அனைவரும் வாருங்கள் அம்பாளையும் அனைத்து தெய்வங்களையும் தொழுது மனஅமைதி பெறுங்கள்... தேவர்கண்டநல்லூர் பெத்தாரணயேசுவரரை தரிசிக்க வரும் பக்தர்களின் பாக்யமாக உள்ளது.