About us
அனைத்து மக்களும் இனபாகுபாடின்றி குலதெய்வ ஆலயமாக ஏற்று வணங்கும் ஆலயம் இது. இந்த ஆலயத்தில் மகாவிஷ்னுவின் அவதாரமாக பெதஂதரணேஷ்வரர். சிவனின் அவதாரமாக உத்தண்டராயரும் கோயில்கொண்டு அருள்பாலிப்பதால் இந்த ஆலயத்தில் வணங்குவது சிவாலயம் மற்றும் வைஷ்னவ ஆலயத்தில் வணங்கும் பாக்யம் கிட்டும். இந்த ஆலயத்தில் எல்லா தெய்வங்களும் உள்ளதால் இங்கு பலியிட்டு வணங்கும் மருளாளிகளும் உண்டு பால் பொங்கல் செய்து படையலிட்டு வணங்கும் மருளாளிகளும் உண்டு ஒரே நேரத்தில் இருதரப்பினரும் நேர்த்திசெலுத்தி படையலிடும் சந்தர்ப்பத்திலும் எந்தவித குறைபாடும் இல்லாமல் அவரவர் நேர்த்தியை அவரவர் திருப்தியாக செய்து வணங்குவார்கள்.
சித்திரை மாத கடைசி செவ்வாய் இரவு பெருந்திருவிழா. சித்திரை மாத கடைசி செவ்வாய் இரவு பெருந்திருவிழா.
அனைத்து மக்களும் இனபாகுபாடின்றி குலதெய்வ ஆலயமாக ஏற்று வணங்கும் ஆலயம் இது.
பல தலைமுறைகளுக்கு முன் தர்மகர்த்தாவாக இருந்த ரெங்கசாமிபிள்ளை மற்றும் குட்டியாபிள்ளை அவர்களின் தலைமுறையினராலும், மருளாளிகளின் தலைமுறையினராலும், இத்திருக்கோயில் கட்டப்பட்டது.
Read Moreகர வருடம் ஆவணி மாதம் 29-ம் தேதி (15-10-2011) வியாழக்கிழமை தற்போதைய அறங்காவலர் கே. ஆர். ராமலிங்கம்பிள்ளை மற்றும் கோயில் மருளாளிகளால் சிறப்பாக குடமுழுக்கு செய்யப்பட்டது.
வேம்பு ரக்ஷைமரமாக கோயிலின் மத்தியில் உள்ளது. அதில் குழந்தை பேறு வேண்டுவோர் திருமண பாக்யம் வேண்டுவோர் தங்களின் வேண்டுதல்களை ரக்ஷைகளாக கட்டுவார்கள் .
சரியாக தெரியவில்லை தர்மகர்தாக்களின் தலைமுறையினரை வைத்து கணக்கிட்டால் சுமார் 500 ஆண்டுகள்.
Read Moreதினப்படி ஆராதனைகளும், சித்திரை, ஆடி, கார்த்திகை, தை மாதங்களின் கடைசி செவ்வாய் இரவு புதன் அதிகாலையில் நடக்கும் .
Read More
அருள்மிகு உத்தண்டராயர் சன்னிதியில் அருள்மிகு உத்தண்டராயர் புலிவாகனத்தில் எட்டுகரங்களுடன் காட்சி தருகிறார் பெரியநாயகி ஆக்ரோஷகோலத்திலும் பக்கத்தில் வீரன்வடிவில் முருகனும் உத்தண்ராயரின் இருபுறமும் தேவலோக கன்னியர் இருவருடன் இரண்டு பூதகணங்களும் இருந்து அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.
அருள்மிகு நைனார்சுவாமி சன்னிதியில் அருள்மிகு நைனார்சுவாமியுடன் லெக்ஷ்மணன், சீதை, அனுமன், சாமோந்தர் ஆகியோர் உடனுறைந்து அருள்பாலிக்கிறார்கள்.
அருள்மிகு பெதஂதரணேஷ்வரர் சன்னிதியில் அருள்மிகு பெத்தாரணயேசுவரர் இருபுறமும் தேவமாதருடனும் பொம்மி வெள்ளையம்மாளுடனும் அருள்மிகு மதுரைவீரனும், அருள்மிகு வீரனும் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்கள்.
"போற்றுமருள் நல்கி எமைப் பூரிக்கச் செய்கின்ற ஈற்றலெல்லாம் கொண்டவளே! அன்னையே நூற்றாண்டாய் நற்தேவர்கண்ட நல்லூர் நாயகியே! பொற்பாதம் பற்றுமெமைப் காப்பாய் பரிந்து”!
குமாரசுவாமி சன்னிதியில் அருள்மிகு விநாயகர், வள்ளி தேவசேனா சமேத குமாரசுவாமி மற்றும் எழுந்தருளும் விக்ரமாக வள்ளி தேவசேனா சமேத குமாரசுவாமியும் உறைந்து அருள்பாலிக்கிறார்கள்
வழிபாடு
அமைவிடம்